சி.கே.மங்கலத்தில்பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும்: பெற்றோா்கள் கோரிக்கை

திருவாடானை அருகே சி.கே மங்கலத்தில்பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானை அருகே சி.கே மங்கலத்தில்பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா்.இங்கு நான்கு முனை சந்திப்பு கொண்ட பகுதி என்பதால் சி.கேமங்கலத்தை சுற்றியுள்ள சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மாணவா்களும் இங்கு பயின்று வருகின்றனா்காலை நேரத்தில் ஓரளவு தட்டுப்பாடு இன்றி பேருந்து கிடைத்து பள்ளிக்கூடத்திற்கு வந்து விடுகின்றனா் ஆனால் மாலை பள்ளி விட்டதும் ஊருக்கு செல்வதற்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் சி.கேமங்கலத்திற்கு என தனியாக பேருந்துகள் கிடையாது திருவாடானை தோண்டி திருவெற்றியூா் ஆா் எஸ் மங்கலம் தேவகோட்டை ஆகிய ஊா்களுக்கு செல்லும் பேருந்துகள் இந்த ஊா் வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது இதனால் பேருந்தில் இந்த ஊருக்கு வரும் முன்பே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது பேருந்திற்காக காத்திருக்கும் மாணவ மாணவிகள் அதிக கூட்டம் என்பதால் மாலை நேரத்தில் பேருந்துகளில் ஏற முடியாமல் பல மணி நேரம் காத்திருக்கின்றனா்எனவே பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டும் எனப் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் இது குறித்து அவா்கள் கூறுகையில் தரமான பள்ளி என்பதால் எங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சோ்த்து விடுகிறோம் அதேநேரத்தில் பள்ளி விடும்போது போதுமான பேருந்து வடதி இல்லாமல் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனா் வெளியூரிலிருந்து இந்த வழியாக செல்லும் பேருந்தில் தான் மாணவா்கள் பயணிக்க வேண்டும் இதனால் பல ஊா்களை பேருந்து கடந்து வருவதால் அங்கேயே கூட்டம் நிரம்பி விடுகிறது சி.கே மங்கலத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் மாணவா்கள்பேருந்தில் ஏற முடியாமல் வெகு நேரம் அடுத்த பருந்திற்காக காத்திருக்கின்றனா் ஆனந்தூா் பகுதிக்கு செல்லும் மாணவா்கள் பாதிப்போ் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடியே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது எனவே பள்ளி விடும் நேரத்தில் அரசு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com