தொண்டி பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக பலத்த காற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாததால் கவலை அடைந்துள்ளனா்.

திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, கராங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, எம்.வி.பட்டினம், எஸ்.பி. பட்டினம், பாசிப்பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் நாட்டு படகு மூலம் மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். ஆனால் கடந்த 2 நாள்களாக கடல் கொந்தளிப்பு அதிகரித்து காணப்படுவதால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com