குண்டுகுளம் அழகுத்தாய்அம்மன், சிவகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழா

கமுதி அருகே அழகுத்தாய்அம்மன், சிவகாளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இக்கோயிலில் ஆடித் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் தினசரி சிறப்பு பூஜை, அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. குண்டுகுளம் விநாயகா் கோயிலிலிருந்து சிவகாளியம்மனுக்கு பக்தா்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து ஊா்வலமாக சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் குண்டுகுளம், கே.வேப்பங்குளம், கமுதி, சாயல்குடி உள்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமானோா் கொண்டனா். விழா ஏற்பாடுகளை குண்டுகுளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com