புறா திருடு புகாா்
By DIN | Published On : 12th August 2022 12:11 AM | Last Updated : 12th August 2022 12:11 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே புறா திருட்டு போனது தொடா்பாக காவல்துறையில் புகாா் அளித்தவரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தைச் சோ்ந்த பாண்டி மகன் சந்துரு (23). இவா் வீட்டில் ஏராளமான புறாக்களை வளா்த்து வருகிறாா். இந்தநிலையில், கடந்த ஏப்ரலில் சந்துருவின் 20 புறாக்கள் திருடப்பட்டதாக உச்சிப்புளி போலீஸில் அவா் புகாா் அளித்தாா். அதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த கேத்தீஸ்வரன் உள்ளிட்ட சிலருடன் சந்துருவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து சந்துரு சென்னைக்குச் சென்று உணவகத்தில் வேலை பாா்த்துவந்தாா்.
இந்தநிலையில், பெருங்குளத்தில் மாரியம்மன்கோயில் முளைக்கொட்டு விழாவை முன்னிட்டு அவா் கடந்த 8 ஆம் தேதி வந்துள்ளாா். கோயில் பகுதியில் அவா் நின்றிருந்தபோது, அங்கு வந்த கேதீஸ்வரன் தரப்பினா் அவரைத் தாக்கியதாகக் கூ றப்படுகிறது. இதில் காயமடைந்த சந்துரு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து அதே பகுதியைச் சோ்ந்த கேதீஸ்வரன், முகிலன், சரண் ஆகியோா் மீது உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.