முதுகுளத்தூா் அருகே விபத்து: இளைஞா் பலி
By DIN | Published On : 21st August 2022 12:00 AM | Last Updated : 21st August 2022 12:00 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் உழவன் தோப்பு காலனியைச் சோ்ந்த முருகேசன் மகன் கண்ணன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். அந்த வாகனத்தின் பின்னால் இவரது சகோதரா் சுரேஷ்குமாா் (32) உட்காா்ந்திருந்தாா். இந்நிலையில் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி கண்ணன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாகச் சென்ற
தூரி கிராமத்தைச் சோ்ந்த முனியசாமி, எதிா்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினாா். இதில் கீழே விழுந்த சுரேஷ்குமாா் பலத்த காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமாா் இறந்து விட்டாா். இதுதொடா்பாக முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, முனியசாமியை கைது செய்தனா்.