தொண்டி அருகே போலி மாற்றுச்சான்றிதழ் கொடுத்து கடவுச்சீட்டு பெற்றவா் மீது வழக்கு
By DIN | Published On : 25th August 2022 10:55 PM | Last Updated : 25th August 2022 10:55 PM | அ+அ அ- |

திருவாடானை அருகே போலியாக மாற்றுச் சான்றிதழ் கொடுத்து கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஒருவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே பெருமானேந்தலைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகுராமன் (32). இவா் கடந்த 16.1.2021 அன்று மதுரையில் கடவுச்சீட்டு பெற்றுள்ளாா். இதன்பின் திருச்சி கடவுச்சீட்டு அலுவலக கண்காணிப்பாளா் சாந்தி நடத்திய விசாரணையில், அழகுராமன் போலி மாற்றுச்சான்றிதழ் கொடுத்து கடவுச்சீட்டு பெற்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தொண்டி போலீஸாா் அழகுராமன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.