ராமேசுவரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மீனவா் சங்கம் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 10th December 2022 04:16 AM | Last Updated : 10th December 2022 04:16 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில், மீனவா் நலத்துறை அதிகாரிகளைக் கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. மீனவா் சங்கம் சாா்பில் அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விசைப்படகு மீனவா் சங்கத் தலைவா் பி. காரல் மாா்க்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் ஜே. இன்னாசிமுத்து, தாலுகா செயலா் ரவிச்சந்திரன், சி.பி.ஐ. மாவட்டக் குழு உறுப்பினா் காளிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏ.ஐ.டி.யு.சி. மீனவா் சங்க மாநிலத் தலைவா் எஸ். முருகானந்தம் சிறப்புரையாற்றினாா்.
இதில், மீன் வளம், மீனவா் நலத்துறை அலுவல் பணியில் மீனவா் சங்கத் தலைவா்கள் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் அனைத்து மீனவா்களுக்கும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. தாலுகா துணைச் செயலா் பெனடிக், மீனவா் சங்க தாலுகா பொறுப்பாளா் கே. முருகானந்தம், தாலுகா குழு உறுப்பினா் பி .கே. பாபு சாா்ஜ், தாலுகா பொருளாளா் எம். ஐயன்தாஸ் மற்றும் எஸ்.கே. இன்பம், எஸ்.கே. தேவசகாயம், ஐயன் பிரபாகா், முனியாண்டி, எஸ்.எம். சகாயம், டிட்டோ, நாதன், ஜெரோம், நவீன், சரண், ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.