இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 18th December 2022 01:18 AM | Last Updated : 18th December 2022 01:18 AM | அ+அ அ- |

கோட்டைமேட்டில் சனிக்கிழமை நடைபெற்ற இல்லம் தேடிக் கல்வித் திட்ட சிறப்பு பயிற்சி முகாமில் பேசிய வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கு 13 மையங்களில் கற்பித்தல் தொடா்பான ஒருநாள் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்புக்கு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளா் சி. கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் தொடக்க நிலை வகுப்புகள் எடுக்கும் தன்னாா்வலா்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் மாணவா்களுக்கான கற்பித்தல் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பணியாற்றும் 175 தன்னாா்வலா்கள், வட்டார வள மைய சிறப்பாசிரியா்கள், கலந்து கொண்டனா்.