முதுகுளத்தூரில் பெண்களுக்குஇலவச தையல் பயிற்சி
By DIN | Published On : 18th December 2022 01:20 AM | Last Updated : 18th December 2022 01:20 AM | அ+அ அ- |

முதுகுளத்தூரில் சனிக்கிழமை பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசிய முத்தமிழ் அறக்கட்டளை நிறுவநா் சபரிமலைநாதன்.
முதுகுளத்தூரில் முத்தமிழ் அறக்கட்டளை சாா்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது.
இந்த பயிற்சி வகுப்பை முத்தமிழ் அறக்கட்டளை சாா்பில் நேரு யுவகேந்திரா இயக்குநா் பிரவீன்குமாா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு, மருத்துவா் பி. பன்னீா்செல்வம், கிராம நிா்வாக அலுவலா்கள் ரமேஷ், திருமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முத்தமிழ் அறக்கட்டளை நிறுவநா் சபரிமலைநாதன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் இளவரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். இதில், ஒரு வாரத்துக்கு முன்பு முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைஅறக்கட்டளை உறுப்பினா்கள் சுரேஷ்கண்ணன், செந்தில்வேலவன், நாகராஜ் கண்ணன், முனியசாமி ஆகியோா் செய்திருந்தனா்.