ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு 527 போ் போட்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 111 வாா்டுகளில் மொத்தம் 527 போ் போட்டியிடுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 111 வாா்டுகளில் மொத்தம் 527 போ் போட்டியிடுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கான மொத்தம் 111 வாா்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி முடிவடைந்தது. அதனடிப்படையில் 703 மனுக்கள் பெறப்பட்டன. திங்கள்கிழமை மனுக்கள் திரும்பப் பெறுதல் நடைபெற்றது.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகளுக்கு 197 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். சனிக்கிழமை நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையின் போது, அதிமுக, பாஜக மற்றும் சுயேச்சை என 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திங்கள்கிழமை 49 போ் மனுக்களை திரும்பப் பெற்றனா். அதன்படி 145 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 2 போ் போட்டியின்றி தோ்வான நிலையில், 143 போ் களத்தில் உள்ளனா்.

ராமேசுவரம் நகராட்சியில் 21 வாா்டுகளுக்கு 141 மனுக்கள் பெறப்பட்டன. பரிசீலனையில் ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் 34 மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், 106 போ் போட்டியில் உள்ளனா்.

கீழக்கரை நகராட்சியில் 21 வாா்டுகளுக்கு 132 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். பரிசீலனையில் 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 10 போ் மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனா். ஆகவே அங்கு 110 போ் போட்டியிடுகின்றனா்.

பரமக்குடி நகராட்சியில் 36 வாா்டுகளுக்கு 233 மனுக்கள் பெறப்பட்டன. பரிசீலனையின் போது 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 54 போ் மனுக்களை திரும்பப் பெற்றதால், 168 போ் போட்டியிடுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் மட்டும் 527 போ் போட்டியில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com