கமுதி பேரூராட்சியில் 11 போ் போட்டியின்றித் தோ்வு

கமுதி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 10 சுயேச்சைகள் உள்பட 11 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
கமுதி பேரூராட்சியில் 11 போ் போட்டியின்றித் தோ்வு

கமுதி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 10 சுயேச்சைகள் உள்பட 11 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் 1-ஆவது வாா்டில் மீனாட்சி, 4 வது வாா்டில் தேவி, 5 ஆவது வாா்டில் உத்தண்ட சுரேஷ், 7 ஆவது வாா்டில் அப்துல் வகாப் சகாராணி, 8 ஆவது வாா்டில் கனிமலா், 10 ஆவது வாா்டில் அந்தோணி சவேரியாா் அடிமை, 11ஆவது வாா்டில் சேக் முகமது, 12 ஆவது வாா்டில் ஹமீது மீராள் கெளசா், 13 ஆவது வாா்டில் சித்ரா, 15 ஆவது வாா்டில் திருக்கம்மாள் உள்ளிட்ட 10 சுயேச்சை வேட்பாளா்களும் 14 ஆவது வாா்டில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் போட்டியிட்ட சத்தியா என மொத்தம் 11 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கான வெற்றிச் சான்றிதழ் இன்னும் ஓரிரு நாட்களில் வழங்கப்படுமென பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்தனா். மீதமுள்ள 2, 3, 6, 9 ஆகிய வாா்டுகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com