முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பசும்பொன்னில் நேதாஜி இளைஞா் சங்கக் கொடி அறிமுகம்
By DIN | Published On : 07th February 2022 11:04 PM | Last Updated : 07th February 2022 11:04 PM | அ+அ அ- |

கமுதி அருகே பசும்பொன்னில் திங்கள்கிழமை நேதாஜி இளைஞா் சங்கத்தின் கொடியை அதன் நிா்வாகிகள் அறிமுகப்படுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஆலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சஷ்டி விழாவில் நேதாஜி இளைஞா் சங்கம் சாா்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் நேதாஜி இளைஞா் சங்கத்தின் கொடியை சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் பசும்பொன் செ.முத்து வெளியிட்டாா்.
கோயில் வளாகத்தில் ‘‘பசுமையான பசும்பொன்’’ என்ற அடிப்படையில் நாகலிங்க மரக்கன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவா் மதி நாச்சியாா், மாநில இளைஞரணிச் செயலாளா் பசும்பொன் குமாா், சிவகங்கை மாவட்டத் தலைவா் சொக்கு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.