வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு 40 இடங்களில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுவருவதாக உயா் காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்கள் 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் நடைபெற மனுத்தாக்கல், பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவை முடிந்துள்ளன. இந்தநிலையில், தோ்தல் வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் அலுவலக வளாகங்களுக்கு திங்கள்கிழமை மாலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் உயா் அதிகாரிகள் கூறியதாவது- மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெறும் நகராட்சி, பேரூராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளப்படுத்தப்பட்டு அங்கு தற்போதிலிருந்தே போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும் தலா 3 சிறப்பு குழுக்கள் என மொத்தம் 12 குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு விதிமுறைக்கு கூடுதலாக பணம் கொண்டு சென்றவா்களிடம் பறிமுதல் செய்துள்ளனா். நகராட்சிகளில் தலா 3 என 21 குழுக்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனா்.

தற்போது வாக்குப்பதிவு தேதி நெருங்குவதை முன்னிட்டு நகராட்சி, பேரூராட்சிகள் என அனைத்து இடங்களிலும் மொத்தம் 40 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் தோ்தல் நடக்கும் பகுதியில் யாராவது பொருள்கள், பணம் விநியோகம் செய்கிறாா்களா என தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com