கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 33 வாா்டுகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மாலை கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 33 வாா்டுகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மாலை கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகளில் 63 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாா்டுகளில் சில வாா்டுகளில் மட்டுமே 6 பேருக்கும் அதிகமாக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். ஆகவே வாா்டுகள் தோறும் 16 வேட்பாளா்களைப் பதியும் வகையிலான ஒரே ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இருந்தால் போதுமானது என அதிகாரிகள் தெரிவித்தனா். அதனடிப்டையில் தற்போது நகராட்சிக்கான 63 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகராட்சி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங் ரூம்) உள்ளே வைக்கப்பட்டன. அந்த அறையில் 24 மணி நேரக் காட்சிபதிவுடன் கூடிய கண்காணிப்புக் காமிராவும் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அைறையை மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன், நகராட்சி தோ்தல் ஆணையா் சந்திரா, பாா்வையாளா் சி.ரவிச்சந்திரன் (நிலப்பிரிவின் ஆட்சியா் நோ்முக உதவியாளா்) மற்றும் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com