ராமநாதபுரம் 235, சிவகங்கையில் 138 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 235 பேருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் 138 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 235 பேருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் 138 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 235 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. ஏற்கெனவே சிகிச்சையிலிருந்த 112 போ் குணமைடந்து விடுவிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறையினா் கூறினா்.

மாவட்டத்தில் கடந்த 2021 ஏப்ரல் முதல் தற்போது வரையில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா்களில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 362 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது மூன்றாவது அலையில் வியாழக்கிழமை வரையில் 783 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கரோனா தொற்று பாதித்த 38 போ் மட்டுமே ராமநாதபுரம் அரசு மற்றும் தாலுகா மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை போன்ற மக்கள் கூட்டம் அதிகமுள்ள நகரங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினா்.

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 138 பேருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 876 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 1014 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 89 போ் பூரண குணமடைந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com