கோயில்களில் குவிந்த பக்தா்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் உள்ள கோயில்களிலும் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் உள்ள கோயில்களிலும் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட 3 நாள்களில் ராமநாதபுரம் பகுதியில் கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

திங்கள்கிழமை காலையில் ராமேசுவரம் நாகநாதசுவாமி கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்தனா். அவா்கள் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புனித நீராடி விட்டு கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தனா். அதேபோல் தேவிபட்டிணம், சேதுக்கரைப் பகுதியிலும் புனிதநீராட நூற்றுக்கணக்கானோா் குவிந்தனா்.

திருப்புல்லாணி, தேவிபட்டினம், பெருவயல் முருகன் கோயில் மற்றும் திரு உத்திரகோசமங்கை ஆகிய கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com