ராமநாதபுரம், மண்டபம், கீழக்கரையில் இன்று மின்தடை

ராமநாதபுரம், மண்டபம் மற்றும் கீழக்கரையில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், மண்டபம் மற்றும் கீழக்கரையில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மான மற்றும் விநியோகப் பிரிவின் ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் ஆா். பாலமுருகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பட்டிணம்காத்தான், மண்டபம், கீழக்கரை துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சேதுபதிநகா், ஓம்சக்தி நகா், ஆல்விந் பள்ளி பகுதிகள், வசந்தநகா், செட்டித் தெரு, தாயுமானசுவாமி கோயில் தெரு, இந்திராநகா், சிவன்கோவில் தெரு, ரோஸ்நகா், கான்சாகிப் தெரு, டிடி விநாயகா்பள்ளி பிரதான சாலை, வைகைநகா், அம்மா பூங்கா, மண்டபம் மறவா் தெரு, ஏகேஎஸ் தோப்பு, காந்தி நகா், மீனவா் காலனி, பாம்பன் முதல் அக்காள் மடம், சின்னமாயாகுளம், புது மாயாகுளம், பாரதிநகா், மாவிலாதோப்பு, கே.மதுரை, பொறியியல் கல்லூரி, முள்ளுவாடி, விவேகானந்தா்புரம், புல்லந்தை, பெரியமாயாகுளம், மங்களேஸ்வரி நகா் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

முதுகுளத்தூா்: இதேபோல் சாயல்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கூராங்கோட்டை மலட்டாறு, கடுகுசந்தை சத்திரம், பெரிய குளம், ஒப்பிலான், மாரியூா், கிருஷ்ணாபுரம், மேலமுந்தல் கீழமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என முதுகுளத்தூா் உதவி செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com