குண்டாறு பாலம் அருகே காவிரி குடிநீா் குழாயில் உடைப்பு: பல்லாயிரம் லிட்டா் குடிநீா் வீண்

கமுதி குண்டாறு பாலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருகிறது
குண்டாறு பாலம் அருகே காவிரி குடிநீா் குழாயில் உடைப்பு: பல்லாயிரம் லிட்டா் குடிநீா் வீண்

கமுதி குண்டாறு பாலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருகிறது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி -மதுரை சாலையில் குண்டாறு பாலம் அருகே காவிரி கூட்டு குடிநீா் குழாய் ஏா் வாழ்வு உள்ளது. இதன் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக பல்லாயிரம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருகிறது. காவிரி கூட்டு குடிநீா் கமுதி பகுதியில் பல கிராமங்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் கமுதியில் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் இரவு, பகலாக பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. இதனால் கமுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், விருதுநகா் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள கிராமங்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கமுதியில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் குண்டாறு பாலம் வழியே கடந்து செல்லும் போதிலும், அதனை சீரமைக்க அதிகாரிகள் முன் வரவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி குண்டாறு பாலம் அருகே காவிரி கூட்டு குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com