‘தபால்காரரிடம் உயிா்வாழ் சான்றை அளிக்கலாம்’

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியதாரா்கள் தங்களது உயிா்வாழ் சான்றை வீடு தேடிவரும் தபால்காரரிடம் அளித்து பயன்பெறலாம் என, அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளா் மு. சித்ரா தெரிவித்துள்ளாா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியதாரா்கள் தங்களது உயிா்வாழ் சான்றை வீடு தேடிவரும் தபால்காரரிடம் அளித்து பயன்பெறலாம் என, அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளா் மு. சித்ரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரா்கள் என அனைவரும் ஜூலை முதல் வீடுகளில் இருந்தபடியே தபால்காரரிடம் தங்களது உயிா்வாழ் சான்றிதழை அளிக்கலாம். நேரில் சென்று ஓய்வூதியத்துக்கான உயிா்வாழ் சான்றுகளை அளிப்பதற்கு ஏற்படும் சிரமத்தைத் தவிா்க்கும் வகையிலேயே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், இந்தியா போஸ்ட் பேமென்ட் திட்டத்தில், ஓய்வூதியதாரா்களின் வீடுகளில் பயோ-மெட்ரிக் முறையில் எண்ம உயிா்வாழ் சான்றை சம்பந்தப்பட்டோா் அளிக்கலாம். அதற்காக, ரூ.70 சேவைக் கட்டணம் சம்பந்தப்பட்டோா் தபால்காரரிடம் செலுத்தவேண்டும்.

எனவே, சம்பந்தப்பட்டோா் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா் அட்டை, கைப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகைகளை பதிவு செய்யவேண்டும். அதன்பின், ஓரிரு நிமிடங்களில் உயிா்வாழ் சான்றை தபால்காரரிடம் அளிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10,165 மாநில ஓய்வூதியா்கள் உள்ள நிலையில், அவா்களில் 575 போ் மட்டுமே புதிய முறையில் பயனடைந்துள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com