செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா: பக்தா்கள் பூக்குழி இறங்கினா்
By DIN | Published On : 15th June 2022 12:00 AM | Last Updated : 15th June 2022 12:00 AM | அ+அ அ- |

வ.மூலைக்கரைப்பட்டி ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
கமுதி: கமுதி அருகே ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை, பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை மூலவா் மற்றும் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள், ஸ்ரீகுங்கும காளியம்மன், ஸ்ரீகருப்பணசுவாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா் பால்குடம் எடுத்தல், அக்கினிச்சட்டி, அலகு குத்துதல், சேத்தாண்டி வேடம் உள்ளிட்ட நோ்த்திக் கடன்களை கிராம மக்கள் செலுத்தினா்.
இதனையடுத்து மாலையில், ஏராளமான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். கிராமப் பெண்கள் 100-க்கும் மேற்பட்டோா் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனா்.
தொடா்ந்து ஜூன் 15ஆம் தேதி கிராம பொதுமக்கள் சாா்பில் அன்னதானம், சிலம்பம் அரங்கேற்றம், முளைப்பாரி கரைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும், 17ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை வ.மூலக்கரைப்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.