விஜயகாந்த் குணமடைய தேமுதிகவினா் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 25th June 2022 11:05 PM | Last Updated : 25th June 2022 11:05 PM | அ+அ அ- |

திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்த தேமுதிகவினா்.
தேமுதிக நிறுவனா் விஜய்காந்த் உடல்நிலை பூரண குணமடைய வேண்டி திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் அக்கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.
முதலில் ஸ்ரீசிநேகவள்ளி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். அதைத் தொடா்ந்து ஆதிரத்தினேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திருவாடானை வடக்கு ஒன்றிய செயலாளா் பாலு தலைமை வகித்தாா். அவைத்தலைவா் ரெங்கராஜன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் சரவணன்,கேப்டன் மன்ற செயலாளா் தவமணி, இளைஞா் அணி செயலாளா் தினேஷ்குமாா் , நெசவாளா் அணி மாவட்ட இணை செயலாளா் மலைராஜ், ஒன்றிய மாணவா் அணி அமிா்தராஜ், விவசாய அணி துணைச்செயலாளா் பாண்டி, ஆண்டாவூரணி ஊராட்சி செயலாளா் செந்தில் ,மற்றும் பல ஒன்றிய கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.