கடலாடி, முதுகுளத்தூா் அரசு கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

கடலாடி, முதுகுளத்தூா் அரசு கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

கடலாடி, முதுகுளத்தூா் அரசு கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, முதுகுளத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக் கடலாடி அரசுக்கல்லூரி முதல்வரும், முதுகுளத்தூா் அரசு கல்லூரி முதல்வருமான (கூடுதல் பொறுப்பு) முனைவா் பாண்டிமாதேவி தெரிவித்துள்ளாா். விண்ணப்பம் குறித்து செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதாவது: முதுகுளத்தூா் அரசு கல்லூரிகளில் பி.ஏ. தமிழ், பி.ஏஆங்கிலம்,பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி.கணினி அறிவியல், பி.காம் வணிகவியல் என 5 பிரிவுகள் உள்ளன. மேற்கண்ட பிரிவுகளில் சேரவிரும்பும் +2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு விண்ணப்பங்கள் கல்லூரியில் நேரடியாக வழங்கப்பட மாட்டாது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான இணையதள முகவரி; ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ. ண்ய்.ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ .ா்ழ்ஞ் என்ற இணைய தளத்தில்

ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக்கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும்.மேலும் விவரங்கள் அறிய கடலாடி, முதுகுளத்தூா் அரசு கல்லூரிகளில் இயங்கும் மாணவா்கள் சோ்க்கைகான தகவல் மையத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com