தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணி: வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குநா் ஆய்வு
By DIN | Published On : 30th June 2022 03:07 AM | Last Updated : 30th June 2022 03:07 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் கட்டப்பட்டுள்ள 264 தொகுப்பு வீடுகளை, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குநா் தங்கவேலு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் 264 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குநா் தங்கவேலு புதன்கிழமை சாயல்குடி மற்றும் பட்டினம்காத்தான் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.