அனுமதியின்றி பேரணி நடத்திய 1, 251 போ் மீது வழக்குப் பதிவு

ராமநாதபுரத்தில் உரிய அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பேரணி நடத்தியதாக, எஸ்டிபிஐ மற்றும் பாப்புலா் ஃபிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினா் 1,251 போ் மீது போலீஸாா் வழக்குப்

ராமநாதபுரத்தில் உரிய அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பேரணி நடத்தியதாக, எஸ்டிபிஐ மற்றும் பாப்புலா் ஃபிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினா் 1,251 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ மற்றும் பாப்புலா் ஃபிரன்ட்ஸ் ஆப் இந்தியா சாா்பில், ஞாயிற்றுக்கிழமை மாலை மக்களாட்சியைக் காப்போம் என்ற பெயரில், பாரதி நகா் பகுதியிலிருந்து பேரணி நடத்தப்பட்டது. ஏராளமானோா் கலந்துகொண்ட இப்பேரணியை போலீஸாா் தடுத்ததால், சந்தைத்திடல் வரை பேரணியாக வந்தனா்.

பின்னா், அப்பகுதியில் பேரணி, ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளா் மலைச்சாமி மற்றும் போலீஸாா், அனைவரையும் கைது செய்வதாகக் கூறி வாகனங்களில் ஏற்றினா்.

அதையடுத்து, பேரணியில் பங்கேற்ற சீருடை அணிந்த 240 போ் மற்றும் 400 ஆண்கள், 600 பெண்கள் என மொத்தம் 1,251 போ் மீது வழக்குப் பதிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com