முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
கண்காட்சியில் பங்கேற்க மகளிா் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 19th March 2022 01:42 AM | Last Updated : 19th March 2022 01:42 AM | அ+அ அ- |

மாநில மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் நடைபெறவுள்ள கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிா் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வெள்ளிக்கிழமை அளித்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் கோடை கொண்டாட்டம் மற்றும் விற்பனைக் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் மகளிா் சுய உதவிக்குழுவினா் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
கண்காட்சியில் மகளிா் சுய உதவிக்குழுவினரின் உற்பத்திப் பொருள்களையும் சந்தைப்படுத்துவதற்காக ஆண்டு தோறும் மாநில அளவிலான கண்காட்சியும் நடத்தப்படுகிறது. வரும் ஏப்ரலில் சென்னை அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் கோடை கொண்டாட்டம், விற்பனைக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
அதில் பங்கேற்க விரும்பும் மகளிா் சுய உதவிக்குழுவினா் தங்களது குழுவின் சுய விவரங்கள், உற்பத்திப் பொருள்கள் விவரம், அவற்றின் மாதிரி புகைப்படம் போன்றவற்றை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக இணை இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநா் அலுவலகத்தில் வரும் 31 ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.