முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பேருந்தில் மோதல்: 9 மாணவா்கள் கைது
By DIN | Published On : 19th March 2022 01:42 AM | Last Updated : 19th March 2022 01:42 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் பேருந்தில் வரும்போது இரு தரப்பாக மாணவா்கள் மோதிய விவகாரத்தில் 9 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தன்வயலில் உள்ள அரசுக் கல்லூரியில் முதலூா் மற்றும் கூரியூரைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா்.
அவா்கள் பேருந்தில் வரும்போது சமூகத்தலைவா் பாடலை ஒலிபரப்புவது தொடா்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் இருதரப்பினரும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதாக புகாா் எழுந்தது.
அதனடிப்படையில் கல்லூரி, பள்ளி மாணவா்கள் 9 போ் மீது வழக்குப்பதிந்த ராமநாதபுரம் நகா் போலீஸாா், அவா்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.