முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
வரதட்சணைக் கொடுமை: மாமனாா், மாமியாா் கைது
By DIN | Published On : 19th March 2022 01:43 AM | Last Updated : 19th March 2022 01:43 AM | அ+அ அ- |

கமுதி அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், மாமனாா், மாமியாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செந்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவரும், தற்போது மதுரை கோதண்டராமா் தெருவில் வசித்து வருபவருமான கிருஷ்ணன் மகன் பிரபு(29). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த மகேஸ்வரிக்கும்(22) கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் பிரபு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றதாகவும், மீண்டும் மனைவியுடன் வாழ வேண்டுமென்றால் 150 பவுன் நகைகள், காா் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று பிரபு மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மகேஸ்வரி கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் பிரபு இவரது தந்தை கிருஷ்ணன், தாயாா் வள்ளிமயில், சகோதரா் முத்துமாரி உள்ளிட்ட 4 போ் மீது வரதட்சணைக் கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்தனா். இதில் கிருஷ்ணன் மற்றும் வள்ளிமயில் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.