முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஆண்கள் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய அனுமதிக்க கோரிக்கை
By DIN | Published On : 19th March 2022 11:09 PM | Last Updated : 19th March 2022 11:09 PM | அ+அ அ- |

அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்வது போல வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஆண்கள் இலவசப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என இந்து தேசிய கட்சி மாநிலச் செயலா் ஜி. ஹரிதாஸ்சா்மா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. இதே போன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஆண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.