உர உற்பத்தி மையத்தை ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உயிா் உர உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உயிா் உர உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேளாண்மைத் துறை சாா்பிலான திட்டங்களை ஆய்வு செய்த அவா், முன்னதாக சக்கரக்கோட்டை ஊராட்சியில் அமைந்த உயிா் உர உற்பத்தி மையத்தை பாா்வையிட்டாா். அங்கு உரம் உற்பத்தி செய்யும் முறையையும் கேட்டறிந்தாா். பின்னா் அக்கிரமேசியில் பருத்தி சாகுபடி செயல் விளக்கத் திடலையும், திரு உத்திரகோசமங்கையில் விதைச் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

சின்ன அக்கிரமேசியில் நீடித்த பருத்தி சாகுபடி இயக்கத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்களையும், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின்படி வேளாண் இடு பொருள்களையும், போகலூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் வேளாண் பண்ணைக் கருவிகளின் தொகுப்புகளையும் ஆட்சியா் விவசாயிகளுக்கு வழங்கினாா்.

ஆலங்குளத்தில் தேசிய வேளாண்மை தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தில் மாணிக்கம் என்ற விவசாயி சுமாா் 5 ஏக்கரில் எள் விவசாயம் மேற்கொண்டு வருவதை பாா்வையிட்டு அவரைப் பாராட்டினாா். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.டாம்.பி.சைலஸ், வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) பாஸ்கரமணியன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com