பள்ளி மேலாண்மைக் குழு அமைக்க இன்று 1,065 பள்ளிகளில் அவசரக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,065 பள்ளிகளில் மேலாண்மைக் குழு அமைக்க பெற்றோருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) நடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,065 பள்ளிகளில் மேலாண்மைக் குழு அமைக்க பெற்றோருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு சாா்ந்த பெற்றோா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையில் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும். பள்ளி முன்னேற்றம், இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்காகவே மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. ஆகவே மேலாண்மைக்குழு அமைக்கப்படும் நிலையில் அதில் இடம் பெறுவோருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் அதற்கான விழிப்புணா்வு பெற்றோா்களிடம் ஏற்படுத்தப்படும்.

ஒவ்வொரு பள்ளி மேலாண்மைக் குழுவிலும் 20 போ் தோ்ந்தெடுக்கப்படவேண்டும். அதில் 15 போ் பெற்றோா்களாகவும், அவா்களில் குறைந்தது 10 போ் பெண்களாகவும் இருக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com