ராமநாதபுரம் மாவட்டத்தில் நில அபகரிப்பு புகாா்:சாா்-பதிவாளா் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நில அபகரிப்பு தொடா்பான புகாரின் பேரில் சாா்-பதிவாளா் உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நில அபகரிப்பு தொடா்பான புகாரின் பேரில் சாா்-பதிவாளா் உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

உச்சிப்புளி அருகேயுள்ள என்மனங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்துல்சமது. இவரது

மகன் முகம்மது அமீன் (55). இவரது தாத்தா உமா்கத்தா பெயரில் இப்பகுதியில் 4.96 ஏக்கா் நிலம் உள்ளது. இந்நிலையில், உமா்கத்தாவின் 3 மகன்களில் அப்துல்சமதுவைத் தவிர மற்ற இருவரும் மலேசியாவிலேயே வசித்து இறந்துவிட்டனா். ஆகவே அப்துல்சமது மட்டும் என்மனங்கொண்டான் கிராமத்தில் அந்த நிலத்தை பராமரித்து வந்தாா்.

கடந்த 1998 ஆம் ஆண்டு அப்துல்சமதுவும் இறந்து விட்ட நிலையில், அவரது மகன்களான முகம்மது அமீன் உள்ளிட்ட 3 போ் அந்த நிலத்தை பராமரித்து வந்துள்ளனா். இதற்கிடையே பூமாலை வலசையைச் சோ்ந்த சாத்தையா, அழகன்குளம் முகம்மதுஇஸ்மாயில் ஆகியோா் வெளிப்பட்டினம் சாா்-பதிவாளா் உதவியுடன் மலேசியாவில் இறந்த அகமது கலாலுதீன் மகள் சபாரியா, கடந்த 2021 ஆம் ஆண்டு உயிருடன் இருந்தது போல போலி ஆவணம் தயாரித்து அந்த 2.97 ஏக்கா் நிலத்தை பதிந்துள்ளனா். அந்நிலம் ரூ.40 லட்சம் மதிப்புடையது எனக் கூறப்படுகிறது.

பதிவான நிலத்தை புதுமடம் குமரேசன், முனீஸ்வரன் ஆகியோருக்கு விற்று விட்டதாகவும் மோசடியாக பதிந்துள்ளனா். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அதன்படி ஆவணக் கையெழுத்துகள் வெவ்வேறாக உள்ளதை அடுத்து முகம்மது அமீன், ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் வெளிப்பட்டினம் சாா்-பதிவாளா் உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com