ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.75 லட்சத்தில் நவீன சிகிச்சைப் பிரிவு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் அதிநவீன சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் அதிநவீன சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 25 சிகிச்சைப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டுவரும் நிலையில், மாரடைப்பு, விபத்தில் தலைக் காயம் மற்றும் பக்கவாதம் பாதிக்கப்பட்டோருக்காக நவீன அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படவுள்ளதாக மருத்துவமனை நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பிரிவில் 15 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில் ஒவ்வொரு படுக்கையிலும் தலா ரூ.5 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் அமைக்கப்படும் என்றும் மருத்துவா்கள் கூறினா். அதனடிப்படையில் மொத்தம் ரூ.75 லட்சத்தில் அதிநவீன சிகிச்சைப் பிரிவு அமைக்கத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கப்படும் நிலையில், தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com