தொண்டியில் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம்: பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது 

திருவாடானை அருகே தொண்டியில் கட்டுமான தொழிற்சங்கங்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தொண்டியில் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம்: பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது 

திருவாடானை: திருவாடானை அருகே தொண்டியில் கட்டுமான தொழிற்சங்கங்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில்  சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில அடைத்து வைத்துள்ளனர்.

மத்திய-மாநில பொது நிறுவனங்கள், தொழில் அமைப்புசாரா பணியாளர்கள் ஆகியோர்கள் அறிவிக்கப்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருவாடானை அருகே தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பில் பாவோடி மைதானம் கிழக்கு கடற்கரை சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இதில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் S.A.சந்தனம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 38 பெண்கள் உள்பட 140 கட்டுமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட்டத் துணைத் தலைவர் நாகூர்பிச்சை, முடியப்பன் பான்டி மற்றும் கிளைநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com