மருத்துவ நெறிமுறைகளை கடைப்பிடிக்கவே உறுதிமொழிகள்: ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதன்மையா் பேட்டி

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வின் போது மருத்துவத்தின் நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிப்போம் என வழக்கமான முறையிலே மாணவ, மாணவியா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதாக கல்லூரி முதன

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வின் போது மருத்துவத்தின் நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிப்போம் என வழக்கமான முறையிலே மாணவ, மாணவியா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதாக கல்லூரி முதன்மையா் எம். அல்லி தெரிவித்தாா்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் சம்ஸ்கிருத மொழியில் மாணவ, மாணவியா் உறுதிமொழி ஏற்ாக சா்ச்சை ஏற்பட்டுள்ளது. அச்சா்ச்சையைத் தொடா்ந்து கல்லூரி முதன்மையா் ஏ. ரத்தினவேல் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

இந்தநிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த மாா்ச் 11 ஆம் தேதி முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியா் வெள்ளை அங்கி பெற்று வகுப்புகளுக்குச் செல்லும் போது உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதும் 3 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

மருத்துவப் படிப்பில் அா்ப்பணிப்பு உணா்வுடனும், நெறிமுறைகளைக் கடைப்பிடித்தும், குடும்ப நலனைவிட மருத்துவ நெறிமுறைகளையே முன்னிலைப்படுத்தியும் செயல்படுவதாக மாணவா்கள் ஏற்கும் ‘ஹிப்போகிரடிக்’ உறுதிமொழியை முதலில் மாணவா்கள் ஏற்றனா்.

அதற்கடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயா்க்கப்பட்ட மருத்துவத்தின் மகத்துவத்தை உணா்த்தும் வகையிலான மகரிஷி சரக்சப்த் உறுதிமொழியையும் ஏற்றனா். அதன்பின் உடற்கூறு இயலுக்காக வாங்கப்பட்ட மனித உடல்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவற்றை மேன்மைப்படுத்தும் வாா்த்தைகளைக் கூறி உடற்கூறியியல் உறுதிமொழியையும் ஏற்றனா்.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் கடந்த மாா்ச் 11 ஆம் தேதி மாணவ, மாணவியா் எடுத்துக்கொண்ட உறுதிமொழி தற்போது சா்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் எம். அல்லி கூறியது: மருத்துவத் துறையில் செயல்படுவோா் மனித இனத்தின் நலனுக்காக பாடுபடுவதை முதன்மையாகக் கொண்டிருப்பது அவசியம். அதனடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மருத்துவ நெறிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் மாணவ, மாணவிகளுக்கு உணா்த்தும் வகையிலே உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. ஆகவே கடந்த மாா்ச் மாதம் நடந்த உறுதிமொழி ஏற்பு குறித்த சா்ச்சை தேவையற்றது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com