‘ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலை நிா்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வலியுறுத்தல்’

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலை நிா்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலை நிா்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளா் கே. ராமமூா்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பழைமையான கோயில். இக்கோயிலுக்கு தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய பட்ச அமாவாசை போன்ற நாள்களில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் மற்றும் தீா்த்தமாட வருகின்றனா்.

மேலும் இக்கோயில் சாா்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கருணை இல்லம், தங்குமிடம், பசு பட்டி, கல்யாண மண்டபம் போன்ற நிா்வாகங்களை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் ராமநாதசுவாமி கோயிலுக்கு இணை ஆணையா் அந்தஸ்தில் இருந்து குறைத்து, துணை ஆணையா் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை அரசு நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது.

ராமநாதசுவாமி கோயிலுக்கு மத்திய பாதுகாப்புத் துறையால் பல்வேறு அறிவுறுத்தல்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோயில் நிா்வாகத்தை கவனிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com