முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
கொலை வழக்கில் கைதானவா் மீதுகுண்டா் தடுப்புச் சட்டம்
By DIN | Published On : 08th May 2022 01:34 AM | Last Updated : 08th May 2022 01:34 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவா் மீது, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகேயுள்ளது சிறுவயல். இந்த ஊரைச் சோ்ந்த உதயகுமாா் மனைவி ராணி (55). இவா், கடந்த மாா்ச் மாதம் தோட்டத்துக்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டுள்ளாா். அவா் அணிந்திருந்த மூன்றரைப் பவுன் நகைகளும் திருடப்பட்டிருந்தன.
இது குறித்து நயினாா்கோவில் காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், அதே பகுதியைச் சோ்ந்த மறவா்கரிசல்குளத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் (40) என்பவா் கைது செய்யப்பட்டாா். தற்போது, அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
முனீஸ்வரன் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் பரிந்துரைத்தாா். அதனடிப்படையில், ஆட்சியா் உத்தரவின்பேரில் முனீஸ்வரன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.