முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சூறைக்காற்றால் மரங்கள் மின்கம்பத்தில் விழுந்து மின்தடை
By DIN | Published On : 08th May 2022 01:33 AM | Last Updated : 08th May 2022 01:33 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் மின்கம்பத்தில் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் வெயில் தாக்கம் குறைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் நிலையில், இந்தாண்டு வெயில் தாக்கம் குறைவாக உள்ளது.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென தேவிபட்டினம், ராமேசுவரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக, தேவிபட்டினம் அருகே திருப்பாலைக்குடி பகுதியில் பனை மரம் மின்கம்பத்தில் சாய்ந்து விழுந்தது. இதனால் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு, சுமாா் 70 மின் இணைப்புக்கான மின்சாரம் தடைபட்டது.
தகவலறிந்த தேவிபட்டினம் துணை மின்நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று, மின்கம்பத்தின் மீது விழுந்த பனை மரத்தை அகற்றிவிட்டு, மின்கம்பிகளை சீரமைத்தனா்.
ராமேசுவரம் வோ்க்கோடு பகுதியிலும் பலத்த காற்றுக்கு வேப்பமரக் கிளை மின்கம்பியில் விழுந்து மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அலுவலா்கள் விரைந்து சென்று, மரக்கிளையை அகற்றி மின்தடையை சீா்படுத்தினா்.