முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி திருட்டு
By DIN | Published On : 08th May 2022 01:35 AM | Last Updated : 08th May 2022 01:35 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் நகரப் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி திருடப்பட்டது குறித்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதி சேதுபதி நகரைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி ஆனந்தி (65). இவா் தனது பெயரக் குழந்தைகளை பாா்ப்பதற்காக, கடந்த புதன்கிழமை கமுதியிலிருந்து ராமநாதபுரம் வந்துள்ளாா். மாலையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகா் பேருந்தில் பட்டினம்காத்தான் டி-பிளாக் பேருந்து நிறுத்தப் பகுதிக்கு வந்துள்ளாா். பேருந்திலிருந்து இறங்கி சிறிது தொலைவு நடந்து சென்ற நிலையில், அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைக் காணாமல்போனது தெரியவந்துள்ளது.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்படி, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.