முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஜவுளி கடையில் பணம் திருட்டு
By DIN | Published On : 08th May 2022 01:33 AM | Last Updated : 08th May 2022 01:33 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரேயுள்ள ஜவுளி கடையின் மேற்கூரையைப் பிரித்து இறங்கிய மா்மநபா்கள், பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள ஜவுளி கடையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த கோபி (28) என்பவா் காசாளராகவும், மேலாளராக பிரகாஷ் (25) என்பவரும் உள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 6) காலை அங்கு தங்கி பணிபுரியும் 3 போ் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் மேற்கூரை தகரம் பெயா்க்கப்பட்டு, கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு ரூ.75 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், கடையின் கண்காணிப்பு கேமரா பதிவு சாதனங்களும் திருடப்பட்டிருந்தன.
இது குறித்து காசாளா் கோபி அளித்த புகாரின்பேரில், பஜாா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.