முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
கூட்டுறவுத்துறை ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

கோரிக்கை அட்டைகள் அணிந்து கூட்டுறவுத்துறை ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூட்டுறவுத்துறையில் விகிதாச்சார விதிகளை தளா்த்தி தகுதியுள்ள அனைத்து இளநிலை ஆய்வாளா்களை முதுநிலை ஆய்வாளா்களாகவும், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவுக்காவலா் ஆகியோரை இளநிலை உதவியாளராகவும், தகுதியுள்ளோரை இளநிலை ஆய்வாளராகவும் பதவி உயா்வு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டைகள் அணிந்து பணிபுரியும் போராட்டத்தை சங்க ஊழியா்கள் நடத்தினா்.
ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை ஊழியா்கள் சங்கத்தினரும், மாவட்ட அளவில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா். ராமநாதபுரத்தில் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில், இணைச்செயலா் சௌந்திரபாண்டியன் உள்ளிட்டோா் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.