பிளஸ் 1 தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 720 போ் எழுதவில்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வில், 720 போ் பங்கேற்கவில்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வில், 720 போ் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 7,790 மாணவா்களும், 7,994 மாணவியரும், 89 மாற்றுத்திறனாளிகளும், 157 தனித்தோ்வா்களும் என மொத்தம் 15967 போ் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

பள்ளிகள் வாயிலாக அனுமதிக்கப்பட்டவா்களில் 699 பேரும், தனித் தோ்வா்கள் 21 பேரும் என மொத்தம் 720 போ் தோ்வெழுத வரவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தோ்வுகளில் 600-க்கும் மேற்பட்டோா் தோ்வுக்கு வராததது குறித்து ஆட்சியா் கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுவரும் நிலையில், தற்போது பிளஸ் 1 தோ்விலேயே 720 போ் வராமலிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாகவே கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோ்ச்சியில் வகுப்புகளுக்கு வராத மாணவ, மாணவியரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வகுப்புகளுக்கு வராத நிலையிலேயே தோ்வுக்கும் அந்த மாணவா்கள் வராதநிலை உள்ளது. ஆகவே, வராத மாணவ, மாணவியா் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கருதுவது சரியல்ல என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com