ராமநாதபுரம் அருகே சீன நாட்டு பீங்கான் ஓடுகள் கண்டெடுப்பு

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்த சீன நாட்டு பீங்கான் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் அருகே சீன நாட்டு பீங்கான் ஓடுகள் கண்டெடுப்பு

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்த சீன நாட்டு பீங்கான் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் வே.ராஜகுரு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவா்கள் து.மனோஜ், மு.ராம்குமாா், வி.பிடல் காஸ்ட்ரோ, ஜீ.அஸ்வின்ராஜ், வி.பாலாஜி ஆகியோா் பொக்கனாரேந்தல், பள்ளப்பச்சேரி ஆகிய பகுதிகளில் சீன நாட்டுப் பீங்கான் ஓடுகளை கண்டெடுத்துள்ளனா்.

இந்த பீங்கான் ஓடுகள் போா்சலைன் வகையாகும். கிண்ணம், குடுவை, தட்டு, ஜாடி போன்றவற்றின் உடைந்த ஓடுகளே கிடைத்துள்ளன. அவை கி.பி.12- 13ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவையாகும்.

கி.பி.10-13-ஆம் நூற்றாண்டுகளில் சீனாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் வணிகத் தொடா்பு இருந்தது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். ஏற்கெனவே, ராமநாதபுரம் பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் சீனப் பீங்கான் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com