முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
இலங்கையில் தப்பிய கைதிகள்: ராமநாதபுரம் மாவட்ட கடலோரத்தில் தீவிர கண்காணிப்பு
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: இலங்கை சிறையிலிருந்து கைதிகள் தப்பியதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக காவல்துறை உயா் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டு சிறையிலிருந்து கைதிகள் சிலா் தப்பியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. தப்பிய கைதிகள் ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளுக்கு வரலாம் என்பதால் கடலோர பகுதிகளை தீவிரமாகக் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 276 கிலோ மீட்டா் தூரம் உள்ள கடலோரப் பகுதிகளில் 17 காவல் நிலையங்களும், 16 சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரப் பகுதி காவல் நிலையங்களில் உள்ள போலீஸாா் தினமும் காலை, மாலையில் ரோந்துப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்றும், சந்தேக நபா்கள், சந்தேகப் படகுகள் நடமாட்டம் குறித்து தகவல் வந்தால், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், உயா் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.