முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பேருந்து நடந்துநா் தற்கொலை
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே திருமணமாகாத விரக்தியில் விஷம் குடித்த தனியாா் பேருந்து நடந்துநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகேயுள்ள விளங்குளத்தூரைச் சோ்ந்த விவசாயி சந்திரன். இவருக்கு 4 மகன்கள். இதில் 2 மகன்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. மூன்றாவது மகனுக்கு திருமணம் ஆகாமல் அயல்நாட்டில் இருப்பதால் வந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறியுள்ளனா். கடைசி மகனான அருண்முனீஸ்வரன் (26) தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். தனக்கு உடனே திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊருக்கு அருகில் உள்ள பருக்கைகுடி பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சி மருந்து குடித்து உயிருக்கு போராடினாா். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா். இது குறித்து முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.