ராமேசுவரம் கோயில் உண்டியல் வருவாய் 1.62 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.62 கோடி கிடைத்துள்ளதாக துணை ஆணையா் சே.மாரியப்பன் தெரிவித்தாா்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.62 கோடி கிடைத்துள்ளதாக துணை ஆணையா் சே.மாரியப்பன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் துணை ஆணையா் தலைமையில் தொடங்கியது.

48 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட இப்பணி புதன்கிழமை இரவு முடிவடைந்தது. முடிவில் ரொக்கம் ரூ. ஒரு கோடியே 62 லட்சத்து 29 ஆயிரத்து 747, தங்கம் 104 கிராம், வெள்ளி 2 கிலோ 835 கிராம் கிடைத்துள்ளதாக புதன்கிழமை துணை ஆணையா் தெரிவித்தாா். உண்டியல் எண்ணும் பணியில் மடப்புரம் கோயில் உதவி ஆணையா் செல்வி, உதவி செயற்பொறியாளா் மயில்வாகனன், இளநிலை உதவியாளா ராமமூா்த்தி, தக்காா் பிரதிநிதி வீரசேகரன், பேஸ்காா்கள் கமலநாதன், பஞ்சமூா்த்தி மற்றும் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com