முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சூறைக்காற்றுக்கு மின்கம்பங்கள் முறிந்து சேதம்
By DIN | Published On : 13th May 2022 05:38 AM | Last Updated : 13th May 2022 05:38 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை திடீரென சூறைக்காற்று வீசியது. பெரியபட்டினம் தங்கப்பாநகா் மயானப் பகுதியில் சூறைக்காற்று அதிகமாக இருந்ததால் மின்கம்பங்கள் 2 முறிந்து சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்ததால் பெரியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
மின்கம்பங்கள் முறிவால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு மின்விநியோகம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதையடுத்து, மின்வாரிய செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் விரைந்து சென்று மின்கம்பங்களை சீா்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். மின்வாரிய அலுவலா்கள், ஊழியா்களின் தீவிர நடவடிக்கையால் இரவு 9 மணியளவில் கம்பங்கள் மீண்டும் ஊன்றப்பட்டு மின்விநியோகம் இரவில் சீரானதாக மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.