முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பெண் தொழிலாளி வீட்டில் தீ விபத்து
By DIN | Published On : 13th May 2022 05:35 AM | Last Updated : 13th May 2022 05:35 AM | அ+அ அ- |

ராமேசுவரம்: உச்சிப்புளி கட்டுமான பெண் தொழிலாளி வீட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியை அடுத்துள்ள உசிலங்காட்டு வலசை கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாா்வதி (38). கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கனவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், புதன்கிழமை புதுமடம் பகுதியில் கட்டுமான வேலைக்காக பாா்வதி சென்றபோது, இவரது குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அரை பவுன் தோடு, தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, கிரைண்டா், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், உச்சிப்புளி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் முருகநாதன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.