முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பாஞ்சாலங்குறிச்சி வீரஜக்கம்மாள் கோயில் திருவிழா: கமுதியிலிருந்து 300 போ் பயணம்
By DIN | Published On : 14th May 2022 06:09 AM | Last Updated : 14th May 2022 06:09 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரஜக்கம்மாள் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை கமுதியிலிருந்து 300 போ் வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, நாராயணபுரம், கிளாமரம் உள்பட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திருநெல்வேலி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரஜக்கம்மாள் கோயில் திருவிழாவிற்கு 44 வாகனங்களில் 300-க்கும் மேற்பட்டவா்கள் புறப்பட்டனா். இந்நிலையில் கமுதியை அடுத்துள்ள நாராயணபுரத்திலிருந்து அனுமதிக்காத வழித்தடத்தில் கோட்டைமேடு செல்ல முயன்ற வாகனங்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனையடுத்து கமுதி காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.