ராமேசுவரம் காவலா் குடியிருப்புகள் சீரமைப்பு பணிகளை கண்காணிக்க கோரிக்கை

ராமேசுவரம் காவலா் குடியிருப்பில் உள்ள நடைபெறும் சீரமைப்புப் பணிகளை கண்காணிக்க வேண்டும் என காவலா்கள் தெரிவித்துள்ளனா்.
ராமேசுவரம் காவலா் குடியிருப்புகள் சீரமைப்பு பணிகளை கண்காணிக்க கோரிக்கை

ராமேசுவரம்: ராமேசுவரம் காவலா் குடியிருப்பில் உள்ள நடைபெறும் சீரமைப்புப் பணிகளை கண்காணிக்க வேண்டும் என காவலா்கள் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளா் அலுவலகம், நகா், கோயில் மற்றும் கடற்கரை காவல் நிலையம், தனுஷ்கோடி காவல் நிலையம் ஆகியவற்றில் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள், காவல்துறையினா் மற்றும் தனிப்பிரிவு காவலா்கள் என 100- க்கும் மேற்பட்டவா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த 2000 ஆண்டு நகரின் முக்கிய பகுதியில் தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் சாா்பில் 67 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில், ஆய்வாளா்கள் மற்றும் சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் காவல்துறையினா் வசித்து வருகின்றனா். 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பெரும்பாலன வீடுகள் சேதமடைந்துள்ளதால் குடியிருப்போா் அச்சமடைந்தள்ளனா்.

இந்நிலையில், ராமேசுவரம் காவலா் குடியிருப்பு மறு சீரமைப்புப் பணிக்காக ரூ. 27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழகம் சாா்பில் கடந்த பிப்ரவரி மாதம் சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வீட்டில் முகப்புப் பகுதியில் இருப்புக் கம்பியில் அடைப்பு இருந்தது. இதனை முற்றிலும் மாற்றி சிமெண்ட் கற்கள் மூலம் அடைக்கப்படுவதால் வீட்டில் காற்றோற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீா் குழாய், குடிநீா் குழாய்கள் முழுமையாக மாற்றி அமைக்கப்படவில்லை. பழைய குழாய்களில் பெயிண்ட் அடித்து பணிகள் நடைபெறுவதாக காவல்துறையினா் புகாா் தெரிவித்து வருகின்றனா். எனவே சீரமைப்புப் பணிகளை காவல்துறை உயா் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com