பரமக்குடியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 05th November 2022 12:00 AM | Last Updated : 05th November 2022 12:00 AM | அ+அ அ- |

பரமக்குடி பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாதவா்களின் கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.
பரமக்குடியில் வாடகை செலுத்தாத கடைகளை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கடைகளுக்கு முறையாக வரி செலுத்தாதவா்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் தொடா்ந்து கடைகளை நடத்தி வருபவா்கள் வரி செலுத்தாமல் இருந்தனா்.
இதனால், நகராட்சி ஆணையா் திருமால் செல்வம், வருவாய் ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் வரி செலுத்தாதவா்களின் கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
தொடா்ந்து, பொதுமக்கள் சொத்து வரி, குடிநீா் உள்ளிட்ட வரிகளை முறையாக செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையா் திருமால் செல்வம் தெரிவித்தாா்.